கொரோனா வைரஸ் பரவும் சீனாவில் இருந்து 60 விமானங்களில் இந்தியாவுக்கு வந்த 12,828 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என இந்மிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவில் கொரோனா என்ற வைரஸ் பரவி வருவதால் அங்கு பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் இறந்துள்ளனர். அதனால் சீனாவின் எந்த விமான நிலையத்தில் இருந்தும் இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் கடந்த 17 ஆம் திகதி உத்தரவிட்டது.
விமான நிலையத்தில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை குறித்து விமானத்திலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவுக்கு செல்லும் பயணிகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளும்படி பயண ஆலோசனையும் வழங்கப்பட்டது.
உத்தரவுப்படி டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், கொச்சின் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 22 ஆம் தினதி வரை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 60 விமானங்களில் வந்த 12,828 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
1/25/2020 07:16:00 AM
சீனாவில் இருந்து 60 விமானங்களில் வந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: