சாய்ந்தமருது மற்றும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் நோக்கில், குறித்த அலுவலகங்களுக்கு Smart Board வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் இவ்வுபகரணங்களை அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுடீன் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எம். முஜீப் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
பிராந்திய சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துதல் மற்றும் சுகாதார அலுவலகங்களின் நிர்வாகப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறித்த அலுவலகங்களில் நடைபெறும் உத்தியோகபூர்வ கூட்டங்கள், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிச் செயலமர்வுகள், விளக்கக் கூட்டங்கள் மற்றும் ஏனைய நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் சிறப்பாகவும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்திய சுகாதார சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தையும் நிர்வாக வினைத்திறனையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இது முக்கியமானதொரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது

No comments: