மயிலத்தமடு – மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்தும் தொடர்கின்றது. அண்மையில்கூட மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இத்தனை நாட்கள் கடந்தும் அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை.
இனியும் போராட்டங்களை மட்டும் தொடர்வதால் எமது இலக்கை அடைய முடியாது. அரசியல் ரீதியான அழுத்தத்தையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
1. பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தல்!
தமிழ் அரசியல் பரப்பில் உள்ள அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து, பாராளுமன்றத்திலேயே ஒருங்கிணைந்த எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்க வேண்டும். இது மட்டக்களப்பில் நடைபெறும் போராட்டத்தைத் தாண்டி தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும்.

2. மகாவலி அதிகாரசபைக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும்!
மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் பாரம்பரியமாக கால்நடைப் பண்ணையாளர்கள் பயன்படுத்தி வந்த மேய்ச்சல் நிலங்களில், அவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் புறக்கணித்து வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக மகாவலி அதிகாரசபையின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
மகாவலி அதிகாரசபை தனது சட்ட அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தியது? காணி ஒதுக்கீடுகள் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன? பாரம்பரியமாக அந்நிலங்களைப் பயன்படுத்திய பண்ணையாளர்களின் உரிமைகள் ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை?
இந்தக் கேள்விகளுக்கு சட்டரீதியாகப் பதில் கோரி, மகாவலி அதிகாரசபைக்கு எதிராக உரிய நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

3. மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளரின் பொறுப்புக்கூறல்; மீறியமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மயிலத்தமடு பகுதியில் பெரும்போக நெற்செய்கைக்காகக் கால்நடைகளை அப்பகுதியிலிருந்து அகற்றுவது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறான தீர்மானத்தின் அடிப்படையில் கால்நடைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதே பிரதேசத்தில் சட்டவிரோதமான பயிர்ச்செய்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டும் அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளரின் நிர்வாகப் பொறுப்புகள் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க Transfer of Powers (Divisional Secretaries) Act உட்பட தொடர்புடைய காணிச் சட்டங்களின் அடிப்படையில் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும் பொறுப்புகளும் ஆராயப்பட வேண்டும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுடைய சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றத் தவறியுள்ளனரா என்பதை ஆராய்ந்து, ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மூன்று நீதிமன்றத் தீர்ப்புகள் அல்லது உத்தரவுகள் சட்டவிரோதக் குடியேற்றங்களை அகற்றுவது தொடர்பாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான நீதிமன்ற உத்தரவுகள் இருக்கும்போது, அவற்றை நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் அதே காணிகளில் பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அது மிகப்பாரதூரமான விடயமாகும்.
எனவே, ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அவை மீறப்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முன்வர வேண்டும்.
இது இனவாதப் பிரச்சினை அல்ல; எமது மக்களின் வாழ்வாதாரமும் காணி உரிமையும் தொடர்பான பிரச்சினை!
மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினை என்பது கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம், பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காணி நிர்வாகம் தொடர்பான பிரச்சினையாகும்.
எனவே, இதனை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், சட்டம், நீதி மற்றும் மக்களின் உரிமைகள் என்ற அடிப்படையில் அணுக வேண்டும்.
எனது நிலைப்பாடு மிகவும் தெளிவானது:
போராட்டம் தொடர வேண்டும். அதேவேளை, தமிழ் அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் ஒன்றிணைய வேண்டும். மகாவலி அதிகாரசபை தனது சட்டப்பூர்வமான பொறுப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகளின் பொறுப்புகள் விசாரிக்கப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆயிரம் நாட்களைக் கடந்த போராட்டத்திற்கு இன்னும் ஆயிரம் நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
போராட்டம் எமது உரிமைக்கான குரல்; சட்ட நடவடிக்கை அந்த உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆயுதம்!
மயிலத்தமடு – மாதவனைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் மேய்ச்சல் நில உரிமையையும் மீட்டெடுக்க அனைத்துத் தமிழ் அரசியல் தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும்.

No comments: