News Just In

11/05/2026 08:19:00 PM

இடைக்கால தேர்தலில் படுதோல்வி : அமெரிக்க பாதுகாப்பு செயலர் பதவி நீக்கம்…!

இடைக்கால தேர்தலில் படுதோல்வி : அமெரிக்க பாதுகாப்பு செயலர் பதவி நீக்கம்…!



அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக்கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இவ்வாறு தோல்வியைச் சந்திப்பதற்கு ஈரான் மீதான போர் அதனால் அமெரிக்காவில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு அந்நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தோல்விக்கு முறையான வெளியேற்ற உத்தி இல்லாமல் போர் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்திய பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தே முதன்மைக் காரணம் என சொந்தக் கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.
பாதுகாப்பு செயலரை பதவி நீக்க தீர்மானம்

கென்டக்கி மாகாணத்தின் குடியரசுத் கட்சிப் பிரதிநிதி தோமஸ் மாசி, நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடும் போது ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளார்.

ஹெக்செத் உடனடியாகப் பதவியிலிருந்து விலகவேண்டும், இல்லையெனில் இத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படும் என அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்குப் பல குடியரசுத் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பென்டகன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

பீட் ஹெக்செத் மீது சொந்தக் கட்சியினரே கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையிலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருக்கு தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகின்றார்.



செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ட்ரம்ப், ஹெக்செத் தனது பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார் என்றும் அவரைப் பதவியிலிருந்து நீக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இருப்பினும் குடியரசுத் கட்சியின் முன்னணி ஆலோசகர்கள் பலர் இந்த தேர்தல் இழப்பிற்கு யாராவது ஒருவரைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

No comments: