News Just In

11/14/2026 06:25:00 PM

நாளை மட்/இ கி மிசன் நூற்றாண்டு விழா பிரதான நிகழ்வும் ஞாபகார்த்த முத்திரை மற்றும் மலர் வெளியீடும் !

 நாளை மட்/இ கி மிசன் நூற்றாண்டு விழா பிரதான நிகழ்வும் ஞாபகார்த்த முத்திரை மற்றும் மலர் வெளியீடும் !


இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவின் சிறப்பு பிரதான நிகழ்வு நாளை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
கல்லடி விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெறும்.
இலங்கைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
நிகழ்வில் பிரதானமாக, நூற்றாண்டு அறிக்கை, காணொளி, நூற்றாண்டு மலர், முத்திரை, புத்தகங்கள் வெளியீடு மற்றும் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜின் ஆசியுரை என்பன இடம்பெறும்.
சுவாமிகளுடன் கோணம்பட்டி இராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீயும் வருகை தருகிறார்.
அதிதிகளுக்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் தலைமையிலான துறவிகள் பக்தர்கள் பெருவரவேற்பளிக்கவுள்ளனர்.
இதேவேளை,நாளை மறுநாள் 16ஆம் திகதி திங்கட்கிழமை சிவானந்தா வித்தியாலயத்தில் விஞ்ஞானானந்த பவன் திறப்பு, 17ஆம் திகதி மந்திர தீட்சை நிகழ்வு ராமகிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெறும்.
அதேவேளை நவம்பர் 20 ஆம் திகதி
கொட்டக்கலை சிவானந்தா நலன்புரி நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: