News Just In

11/11/2026 06:42:00 AM

பொலிஸாருடன் முரண்பட்ட கஸ்ஸப்ப தேரரின் ஆதரவாளர்..

பொலிஸாருடன் முரண்பட்ட கஸ்ஸப்ப தேரரின் ஆதரவாளர்..



பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் அனுராதபுர புனித நில அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக தேரர்கள் குழு ஒன்று சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி வருகின்றது.

குறித்த போராட்டத்தில் தொடர்ந்து முரண்பாடுகளும் பொலிஸாருடன் மோதல்களும் கூட இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறிருக்கையில், போராடத்தில் கஸ்ஸப்ப தேரரின் ஆதரவாளர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளை தன்னுடன் மோதுமாறு அழைத்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து, பல போராட்டங்களையும் அவற்றில் பல குழப்பமான சூழ்நிலைகளையும் அண்மைக்காலமாக சில தேரர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்விடயம் குறித்து பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களும் சர்ச்சைகளும் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதற்கிடையில், பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் இன்றையதினம், கொழும்பு குற்றபுலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணைக்காக முன்னிலையாகவுள்ளார்

No comments: