உலக சாதனை படைத்த அக்கரைப்பற்று 10 வயது சிறுவன் அபிஷாதன்! தமிழுக்கு பெருமை சேர்த்த இளம் எழுத்தாளர்!
தாயகத்தில் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ரிசாந்தன் அபிஷாதன் (Risanthan Apishathan), ஒரே புத்தகத்தில் அதிக நீதிக் கதைகளை எழுதிய சிறுவர் என்ற பிரிவில் சர்வதேச சாதனை அங்கீகாரத்தைப் பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
10 வயதும் 6 நாட்களும் நிரம்பிய நிலையில், சமூக நல்லொழுக்கங்களை மையமாகக் கொண்டு ஆறு நீதிக் கதைகளைச் சுயமாக எழுதி ஒரே புத்தகமாக வெளியிட்டதன் மூலம் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இவரது அபாரமான எழுத்தாற்றல், படைப்பாற்றல் மற்றும் இளம் வயதிலேயே சமூகத்திற்கு நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லும் முயற்சி ஆகியவற்றைப் பாராட்டி, International Book of Records அமைப்பு, “MOST MORAL STORIES AUTHORED IN A BOOK (PRE-TEEN)” என்ற பிரிவின் கீழ் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026 செப்டம்பர் 27ஆம் திகதி இந்தச் சாதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விளையாடி மகிழும் வயதிலேயே புத்தகங்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், தானே நீதிக் கதைகளை எழுதி நூலாக வெளியிட்டு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள அபிஷாதனின் சாதனை, ஏனைய மாணவர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.
அக்கரைப்பற்று மண்ணிலிருந்து உலக அரங்கில் இலங்கையின் பெயரை உயர்த்தியுள்ள இந்த இளம் சாதனையாளருக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இளம் வயதிலேயே எழுத்துலகில் தடம்பதித்துள்ள அபிஷாதன், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைத்து தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
11/14/2026 06:17:00 PM
உலக சாதனை படைத்த அக்கரைப்பற்று 10 வயது சிறுவன் அபிஷாதன்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: