(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசாரமும் ஞாயிறன்று (22)இடம்பெற்றது.
தங்களது சேவைகளை சிறப்பாக வழங்கி ஓய்வுபெற்ற, பதவியுயர்வு பெற்ற, வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று கடமைகளை ஆற்றிவருகின்ற உயரதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிச்சங்க போசகரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதன்போது பதவியுயர்வு பெற்ற, ஓய்வு பெற்ற, வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிரேஷ்ட உயரதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தவர்களை கௌரவித்தனர்.

No comments: