மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, உலகளாவிய ராமகிருஷ்ண மடாலய மிஷனின் துணைத் தலைவர் சிறீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜினால் மந்திர தீட்சை வழங்கும் ஆன்மீக நிகழ்வு மட்டக்களப்பு ராமகிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு 69 பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கினார்.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு ஆன்மீக சமய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இம்மந்திர தீட்சை நிகழ்வு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் சிறீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீயின் ஏற்பாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ராமகிருஷ்ண சங்கத்தின் ஆன்மீக மரபின்படி, மந்திர தீட்சை என்பது குருவின் வழிகாட்டுதலுடன் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் உபதேசிக்கப்படும் முக்கியமான ஆன்மீகச் சடங்காகும். இது ஆன்மீக சாதனைகளை முன்னெடுப்பதற்கான வழிகாட்டுதலாகவும் பக்தர்களின் ஆன்மீக வாழ்வில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வாகவும் அமைகின்றது.

No comments: