News Just In

1/21/2020 08:32:00 AM

தனியார் கல்வி நிலைய கூரை உடைந்து வீழ்ந்ததில் 08 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில்

தனியார் கல்வி நிலைய கட்டட கூரை உடைந்து வீழ்ந்ததில் 08 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (20) பிற்பகல் 02.30 மணியவில் அம்பலாங்கொட, கலகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தனியார் கல்வி நிலையகட்டடத்தின் கூரை உடைந்து வீழ்ந்தமையினால் குறித்த மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: