மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட கலாசார கூடம் திங்கட்கிழமை (21.01.2020) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று தொன்மை, மரபுரிமை, பாரம்பரியம், கலை, கலாசாரம், பண்பாடு, பூர்வீகம் என்பனவற்றைப் பிரபலிக்கும் வரலாற்று ஆவண ஆய்வகமாக இது பராமரிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட இளம் சமூகத்தினருக்கும், மாணவர்களுக்கும் இந்த வரலாற்று ஆய்வு கூடம் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற கலாசார ஆய்வுகூட திறப்பு நிகழ்வில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments: