News Just In

10/23/2025 06:31:00 PM

செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தன் - வெளியான புகைப்படம்..!

செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தன் - வெளியான புகைப்படம்..! அல்லைப்பிட்டி இளைஞர்கள் தலைமறைவு



இஷாரா செவ்வந்தி விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஆனந்தன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆனந்தன் கைது செய்யப்பட்ட பிறகு அவரிடம் இருந்து சில கைத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் ஆனந்தன் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களையும் ஆட்கடத்தல் செய்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆனந்தன், கடலின் நீரோட்டத்தை வைத்து பிரயாணங்களை தீர்மானிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றவர் என கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்க, ஜே.கே. பாயுடன் சேர்ந்து ஆனந்தன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தி வருவது போன்ற குற்றங்களை செய்துள்ளார்.

இந்நிலையில், யாழ். ஆனந்தன் இவர் தான் என கூறி ஒரு புகைப்படமொன்றும் வெளியாகியுள்ளது.

No comments: