பஸ் மற்றும் அனைத்து கனரக வாகனங்களும் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும் என நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கொழும்பு வாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளதெனவும் இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக்காலப்பகுதிக்குள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு கனரகவாகன சாரதிகள் இடதுபக்க நிரலைப் பயன்படுத்தாமையே இதற்கான காரணமாகும். இந்த விதிகளைமீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நகரத்தை அலங்கரிக்கும் நடவடிக்கைதொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ்பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்தார்.
பஸ்களில் அரசாங்கத்தின்அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடல்கள் இடம்பெறாதுவிட்டால் அது தொடர்பாக 119 என்ற தொலைபேசி மூலம்அறிவிக்க முடியும்.
1/21/2020 07:52:00 AM
பேருந்து, கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: