News Just In

11/24/2026 11:17:00 AM

ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடித் தாக்குதல் – மேலும் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததாக ஈரான் தகவல்!

ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடித் தாக்குதல் – மேலும் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததாக ஈரான் தகவல்!




ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் பாரிய வெடிப்புகளுக்கு உள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

கடந்த சில மணித்தியாலங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கப்பல் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குக் கரைக்கு அருகிலும், ஏனைய இரண்டு கப்பல்கள் நீரிணையின் கிழக்குப் பகுதியிலும் கடல் கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க இராணுவத்தின் கடுமையான வான்வழிப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அணிவகுப்புடன் பயணித்தபோதே குறித்த கப்பல்கள் வெடிப்புகளுக்கு உள்ளானதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க இராணுவத்தின் வான்பாதுகாப்பு கட்டமைப்புகளால் இந்தத் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை என்றும் அந்தப் படை குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் தீப்பரவலைக் காண்பிக்கும் காணொளிகள் அடுத்த சில மணித்தியாலங்களில் வெளியிடப்படும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஈரான் தரப்பின் இந்தக் கூற்றுகள் குறித்து சுயாதீனமான உறுதிப்படுத்தல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

No comments: