News Just In

11/24/2026 11:12:00 AM

மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு கிடைக்கப்போகும் சலுகை என்ன? கல்வி அமைச்சின் அறிவிப்பு!

மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு கிடைக்கப்போகும் சலுகை என்ன? கல்வி அமைச்சின் அறிவிப்பு




அடுத்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் பிக்குகள் மற்றும் இல்லற மாணவர்கள், பெண் பௌத்த துறவிகள் ஆகியோருக்கு பரிசு வவுச்சர்கள் மூலம் பாதணிகளை வழங்கும் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் இரண்டு முறைகளின் கீழ் பயனாளிகளுக்கு பாதணிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய நான்கு மாகாணங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பரிசு வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் திறந்த சந்தையில் தமக்குத் தேவையான பாதணிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.

அதேவேளை, மேல், தென், சபரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய ஐந்து மாகாணங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உள்நாட்டு பாதணி உற்பத்தியாளர்கள் ஊடாக நேரடியாகப் பாடசாலைகளுக்குச் சென்று பாதணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக மாணவர் நெரிசல் காணப்படும் பாடசாலைகளின் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆரம்பப் பிரிவு வகுப்பறை ஒன்றில் அதிகபட்சமாக 30 மாணவர்களையும், தரம் 6 முதல் தரம் 11 வரையிலான வகுப்புகளில் அதிகபட்சமாக 35 மாணவர்களையும் மட்டுப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், உயர்தர வகுப்பறைகளில் அதிகபட்சமாக 40 மாணவர்களை மாத்திரம் அனுமதிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: