News Just In

11/06/2026 11:11:00 AM

மீதமான கொத்து ரொட்டியை மீண்டும் சூடாக்கி வழங்க முயற்சி?

மீதமான கொத்து ரொட்டியை மீண்டும் சூடாக்கி வழங்க முயற்சி?



தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலவாக்கலை நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள உணவகம் ஒன்றில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (06) இரவு சுமார் 8.30 மணியளவில், குறித்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு தட்டுகளில் மீதம் வைத்துச் சென்ற கொத்து ரொட்டியைச் சேகரித்து, மீண்டும் சூடாக்கி மற்றொரு வாடிக்கையாளருக்கு வழங்குவதற்குத் தயார்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை அவதானித்த நபர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, உணவகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக தலவாக்கலை நகருக்கு வருகை தரும் பொதுமக்கள், உணவகங்களில் உணவருந்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உணவக உரிமையாளர்கள் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது

No comments: