கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், உதவி மாவட்ட ஆணையாளர்கள், பிரதித் மாவட்ட ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட சாரணிய தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை ரோயல் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்முனை சாரணிய மாவட்ட ஆணையாளர் மேஜர் கே. எம். தமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை சாரணிய மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம். அமீர் (நளீமி) கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, சாரணிய இயக்கத்தின் எதிர்கால வளர்ச்சி, மாவட்ட மட்டத்திலான செயற்பாடுகள் மற்றும் அவற்றை மேலும் முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் சங்கத் தலைவர் தனது வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட ஆணையாளர் மேஜர் கே. எம். தமீம், மாவட்டத்தின் எதிர்காலத் திட்டங்கள், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சாரணியச் செயற்பாடுகளைப் புதிய பரிமாணத்தில் விரிவுபடுத்துதல் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, உதவி மாவட்ட ஆணையாளர்கள், பிரதித் மாவட்ட ஆணையாளர்கள், மாவட்ட சாரணியத் தலைவர்கள், சமாதானத்திற்கான தூதுவர்கள் மற்றும் மாவட்டக் களஞ்சியப் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், கல்முனை சாரணிய மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி, புதிய செயற்றிட்டங்களை முன்னெடுத்தல், நிர்வாகச் செயற்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் சாரணிய இயக்கத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கல்முனை சாரணிய மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலச் செயற்பாடுகளைத் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்பதற்கான முக்கிய நிகழ்வாக இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: