News Just In

11/09/2026 02:18:00 PM

மத்திய மலைநாட்டில் நிலநடுக்க அபாயம்? பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டில் நிலநடுக்க அபாயம்? பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை!



இலங்கையின் மத்திய மலைநாட்டில் நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய மலைநாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து உச்ச எல்லையை அண்மித்துள்ள நிலையில், இவ்வாறான நில அதிர்வு அபாயம் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கொத்மலை, விக்டோரியா, பொல்கொல்ல, ரந்தெனிகல, ரன்டெம்பே, போவதென்ன, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உச்ச எல்லையை அடைந்துள்ளதாகவும், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இதேபோன்று அதிக மழைவீழ்ச்சி பதிவானதைத் தொடர்ந்து, குறுகிய காலத்திற்குள் மத்திய மலைநாட்டின் தியத்தலாவ மற்றும் பல்லேகலைப் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நீர்த்தேக்கங்களில் அதிகளவிலான நீர் நீண்டகாலம் தேங்கியிருப்பதால், நிலத்தடி பாறை அடுக்குகள் அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் எனவும், இதன் காரணமாக நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்ட அதிகரிப்பு தொடர்பில் உரிய அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments: