நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவப் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று (25) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதன்போது தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தொழுநோய் (Leprosy) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சித்திட்டத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தொழுநோய் பொறுப்பதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் HLSC உத்தியோகத்தர்கள் மற்றும் ADT NGO நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.
தொற்றா நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதுடன், தொழுநோய் தொடர்பான சமூக விழிப்புணர்வை மேம்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: