News Just In

11/25/2026 03:11:00 PM

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்தின் காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக முதலாம் தரத்தை சேர்ந்த திருமதி வரணியா சான்ந்தரூபன் இன்று (25.11.2026) உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றுக்கொண்டார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் முன்னிலையில் இக்கடமையேற்பு நிகழ்வு இடம்பெற்றது. கல்முனை கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொறுப்புகளுக்கு மேலதிகமாக காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கடமைகளையும் திருமதி வரணியா சான்ந்தரூபன் பொறுப்பேற்கும் வகையில், வலயக் கல்விப் பணிப்பாளரினால் அதற்கான அதிகாரபூர்வ நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி, கோட்டத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பல்வேறு பங்களிப்புகளை வழங்கிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்சீவன், பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சாஹுதுல் நஜீம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய பொறுப்புக்கான அதிகாரபூர்வ ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

காரைதீவுக் கோட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ சஞ்சீவன் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவிக்கப்படுவதுடன், புதிய பொறுப்பை ஏற்றுள்ள காரைதீவை பூர்வீகமாக கொண்ட திருமதி வரணியா சான்ந்தரூபனுக்கும் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

No comments: