மாவீரர்களின் தியாகத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம்; மக்களே சுயமாக நினைவேந்தல்களை முன்னெடுக்கின்றனர் – சாணக்கியன் எம்.பி.
கார்த்திகை 27 மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மாவீரர்களின் தியாகத்தையும் நினைவேந்தல் நிகழ்வுகளையும் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்றொழில், கடல்வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு இன்றைய தினம் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், மாவீரர் நினைவேந்தல், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கருத்துத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், உலகம் முழுவதும் இன்றைய தினமான கார்த்திகை 27ஆம் திகதி எமது மண்ணுக்காக வீரமரணமடைந்து உயிர்நீத்த மாவீரர்கள் நினைவுகூரப்படுகின்றனர். மண்ணுக்காகவும், இனத்துக்காகவும் போராடி உயிர்த்தியாகம் செய்த சகல மாவீரர்களுக்கும் இந்த உயரிய சபையின் ஊடாக எனது அஞ்சலியைச் செலுத்திக்கொள்கின்றேன்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகளையும் நினைவேந்தல் நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்தான் அனுமதி வழங்கியுள்ளது என்ற தவறான கருத்தொன்று தற்போது முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களிலும் வடக்கு – கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இருப்பினும், ஒருசில பகுதிகளில் பல்வேறு கெடுபிடிகளும் இடம்பெற்றன.
அரசாங்கங்கள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திய காலப்பகுதிகளில், மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் அதற்கு எதிராக நாம் குரல் கொடுத்துள்ளோம். எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து செயற்பட்டுள்ளோம்.
ஆனால், இம்முறை வடக்கு – கிழக்கு மக்களே சுயமாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளார்கள். இவ்வாறான நிலையில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் இலாபம் தேடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள்தான் முன்னின்று இந்த நிகழ்வுகளை நடத்துகின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு ஒருசில தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
உண்மையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து முன்னெடுக்கின்றனர்.
நினைவேந்தல் நிகழ்வுகளின்போது எமது உறவுகள் கார்த்திகைப் பூவை வைத்து மாவீரர்களை நினைவுகூருகின்றனர். இந்தப் பூ கார்த்திகை மாதத்திலேயே பூக்கின்றது. ஆனால், அந்தப் பூவை வைத்து நினைவேந்தல் செய்வதற்குக்கூட பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி இடையூறுகளை விளைவிக்கின்றனர்.
அவ்வாறாயின், கார்த்திகை மாதத்தில் பூக்கும் அனைத்துப் பூக்களையும் தடை செய்ய வேண்டும். அதேபோன்று, தமிழ் ஈழத்தின் தேசியப் பறவையாக அடையாளப்படுத்தப்பட்ட செம்பகப் பறவையைக் கண்டால் சுட்டுத்தள்ளுங்கள். இந்த நாட்டில் அந்தப் பறவை இருக்கக்கூடாது என்று விரட்டிவிடுங்கள். இவ்வாறான தடைகளும் அணுகுமுறைகளும் எத்தகைய முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களின் போராட்டத்திற்கான வரலாற்றுப் பின்னணி
இந்த நாட்டில் பல்வேறு காரணங்களுக்காகப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும், சமூகத்தில் சமத்துவமின்மையை எதிர்த்தும் பலர் போராடியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி வயிற்றுப்பசிக்காகவும், சமத்துவமின்மைக்கு எதிராகவுமே போராடியது. ஆனால், இன விடுதலைக்காகப் போராடிய வரலாறு அதற்கு இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே போராடினார்கள். 1948ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமைகளையும் புறக்கணிப்புகளையும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே எமது இளைஞர்கள் இனத்திற்காக ஆயுதமேந்திப் போராடினார்கள்.
1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவானது.
அதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை இல்லாதொழிக்கும் வகையில் கல்லோயா திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களை அப்போதைய அரசாங்கம் முன்னெடுத்தபோது அதற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தார்கள். பின்னர் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.
பல்கலைக்கழக அனுமதியின்போது தமிழ் மாணவர்களின் விகிதாசாரம் திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
அதேபோன்று, தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே எமது உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு, இனத்திற்காக உயிர்நீத்தார்கள்.
அந்த வரலாற்றுப் பின்னணியையும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்துதான் இன்று உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை
இந்த நாட்டில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மக்களுக்கான சம அந்தஸ்தும் அரசியல் உரிமைகளும் இன்னும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. இதனைச் சுட்டிக்காட்டினால், தமிழ் மக்களுக்கு தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் கீழ் தேர்தலை நடத்தி, அந்த மக்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதற்குக்கூட இந்த அரசாங்கம் தயாராக இல்லை.
தமிழ் மக்கள் தற்போது மீண்டும் ஆயுதமேந்திப் போராடும் மனநிலையில் இல்லை. இருப்பினும், தமக்கான கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை மாற்றும் திட்டங்கள் தொடர்கின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் திட்டங்களை இந்த அரசாங்கமும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்துள்ளது.
கிவுல் ஓயா திட்டம், கீழ் மல்வத்து ஓயா திட்டம், மாதுறு ஓயா திட்டம் போன்ற திட்டங்களின் ஊடாக தமிழ் – முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
1948ஆம் ஆண்டு முதல் இனவழிப்புக்காக அரசாங்கங்கள் பயணித்த அதே பாதையில்தான் இந்த அரசாங்கமும் பயணிக்கின்றது என நான் கருதுகின்றேன்.
இந்தத் திட்டங்கள் தொடர்பில் வடக்கு – கிழக்கு மக்களின் நியாயமான அச்சங்களையும் உரிமைகள் தொடர்பான கேள்விகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மீனவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி ஆகியவற்றையே பிரதான வாழ்வாதாரத் தொழில்களாகக் கொண்டுள்ளனர்.
மேய்ச்சல் தரைப் பிரச்சினை காரணமாக எமது மக்களின் கால்நடை வளர்ப்புத் துறை முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கான முறையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
மீன்வகைகளுக்காக 16 ரூபா செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் திட்டம் நடைமுறையில் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் அவசியமாகும். அந்த வகையில், மீனவர் சங்கங்களுக்கான கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தனர். ஆனால், அந்த விஜயத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.
அம்பலாந்துறை மீனவர் சங்கத்திற்கான கட்டடம், துறைநீலாவணை மீனவர் சங்கத்திற்கான கட்டடம், கஞ்சிரன்குடாவுக்கான கட்டடம் மற்றும் உறுகாமத்திற்கான கட்டடம் ஆகியவற்றை நிர்மாணித்துத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தக் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இறால் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்பு
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் கடந்த ஆண்டு வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது, இறால் இறக்குமதியினால் தேசிய உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடந்த ஆண்டு மாத்திரம் 5,939 மெற்றிக் தொன் இறால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் பெருந்தொகையானவை மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் இறால் உற்பத்தியுடன் தொடர்புடைய தொழிற்துறைகளில் 57 சதவீதமானவை மூடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில், உள்நாட்டு இறால் உற்பத்தியாளர்களும் மீனவர்களும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மீனவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.
மாவீரர்களின் தியாகத்தையும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் வரலாற்றையும் மறந்துவிட முடியாது. அதேபோன்று, இன்றும் தமது வாழ்வாதாரத்திற்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என அவர் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.

No comments: