News Just In

11/09/2026 02:26:00 PM

துறைமுக நகரில் போக்குவரத்து ட்ரோன்கள் வெள்ளோட்டம்!

துறைமுக நகரில் போக்குவரத்து ட்ரோன்கள் வெள்ளோட்டம்!




பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மின்சார ட்ரோன்கள் கொழும்பு துறைமுக நகரில் (Port City) சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி இவற்றின் உத்தியோகபூர்வ செயல் விளக்கம் நடைபெறுகிறது.

இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக இந்தப் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சீனாவின் EHang Holdings நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடிய (eVTOL) வானூர்தித் தொழில்நுட்பத்தில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய முதலாவது வானூர்தி ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை, சரக்குப் போக்குவரத்து, அவசர மருத்துவப் போக்குவரத்து,தொலைதூரப் பகுதிகளுக்கான விநியோக நடவடிக்கைகளில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் இலங்கை சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளன.

நவம்பர் 11ஆம் திகதி நடைபெறவுள்ள செயல் விளக்கத்தின்போது, நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்தில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன

No comments: