News Just In

11/25/2026 02:53:00 PM

நாவிதன்வெளி 5ஆம் குடியேற்றக் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

நாவிதன்வெளி 5ஆம் குடியேற்றக் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞன் சடலமாக மீட்பு!


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி 5ஆம் குடியேற்றக் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது இதுவரை தெரியவரவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இளைஞரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பான மேலதிக விபரங்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: