News Just In

10/18/2026 10:02:00 AM

மகிந்தவின் மகனின் பல மில்லியன் ரூபா சம்பளம் : நண்பர் அம்பலப்படுத்திய தகவல்

மகிந்தவின் மகனின் பல மில்லியன் ரூபா சம்பளம் : நண்பர் அம்பலப்படுத்திய தகவல்




முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச பல மில்லியன் ரூபாவை சம்பளமாக பெற்ற போதும், அதனை செலவு செய்யவில்லை என, அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யோசித கடற்படையில் சேவையாற்றிய போது பெற்ற சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நண்பரின் கருத்து வெளியாகி உள்ளது.

2006 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் 5.15 மில்லியன் ரூபா முழுச் சம்பளத்தைப் பெற்றுள்ளார்.

அதாவது மேலதிக கொடுப்பனவு இல்லாமல் அந்த தொகையைப் பெற்றுள்ளார். மேலதிக கொடுப்பனவுகளுடன் இது மூன்று மடங்காக அதிகரித்து 15.45 மில்லியன் ரூபாவாக இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

எனினும் யோசித இந்தச் சம்பளத்திலிருந்து எதனையும் செலவு செய்யவில்லை என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

அரச செலவில் அனைத்தும் கிடைக்கும் போது, தனது சொந்த பணத்தை செலவு செய்வதை யோசித தவிர்த்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் யோசித ராஜபக்சவிற்கு 16 வயதாகும் போது 70,000 ரூபா வைப்பிலிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கு ஒன்றும் அரச வங்கியொன்றில் காணப்பட்டது.

எனினும் கடந்த நல்லாட்சி காலத்தில் அந்த கணக்கு முடக்கப்பட்டதாக நண்பர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது

No comments: