News Just In

10/18/2026 10:02:00 AM

ஒரு மணி நேரம்தான் வைத்தியசாலையில்! பரிசோதனையில் சிக்கிய கஸ்ஸப்ப தேரர்

ஒரு மணி நேரம்தான் வைத்தியசாலையில்! பரிசோதனையில் சிக்கிய கஸ்ஸப்ப தேரர்



கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், மேலதிக மருத்துவக் கண்காணிப்புக்காக வைத்தியசாலையில் தங்கியிருக்க மறுத்து வெளியேறியுள்ளார்.

இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக்க குமார உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.30 மணியளவில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென் றார் 

இதன்போது மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, கதிரியக்கப் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பரிசோதனைகளில் உடலில் ஏதேனும் பாதிப்பு அல்லது அசாதாரண நிலை இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தனது தலையில் தாக்கப்பட்டதாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவரை அவசர சிகிச்சை விடுதியில் அனுமதித்து, முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

No comments: