இந்தியாவில் துர்கா பூஜை திருவிழாவின் போது நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் கொல்கத்தா நகரில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளனர்.
திடீரென பெய்த பலத்த மழையிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் ஒரே நேரத்தில் புகலிடம் தேடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலே இந்தத் துயரத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் போது வெளியான அறிவிப்பு ஒன்றால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு முன்னோக்கி ஓடியபோது கீழே விழுந்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 07 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்த 25 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இதுவரை 06 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் குறித்துத் துயரம் வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இது ஒரு பேரனர்த்தம் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய மாநில அரசு உதவி வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சீரற்ற முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறைபாடுகளினால் இந்தியாவில் இதுபோன்ற மதத் திருவிழாக்களின் போது கூட்ட நெரிசல் விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
10/18/2026 10:01:00 AM
இந்தியாவில் துர்கா பூஜை திருவிழாவின் போது நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments: