News Just In

10/21/2026 03:45:00 PM

காட்டு யானை தாக்கியதில் வயோதிப விவசாயி பலி

காட்டு யானை தாக்கியதில் வயோதிப விவசாயி பலி


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கரடியனாறு பொலிஸ் பகுதிக்குட்பட்ட தம்பானம்வெளி கிராமத்தில் வெவ்வாய்க்கிழமை (20) இரவு காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விவசாயியான 61 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை வல்லிபுரம் கணேஷ் என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் உடற்கூராய்வுப் பரிசோதனையில் அடையாளம் காட்டியுள்ளனர்.

அவரது வீட்டை அண்டி அமைந்துள்ள தோட்டத்திற்கு வெவ்வாய்க்கிழமை (20) இரவு சுமார் 11.30 மணியளவில் வந்த காட்டு யானையை அவர் விரட்டியக்க முற்பட்டவேளையிலேயே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உறவினர்களால் எடுத்து வரப்பட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: