News Just In

10/21/2026 03:43:00 PM

மாபெரும் ஆய்வரங்கும் புத்தகக் கண்காட்சியும் நூல்கள் வெளியீடும் கலை ஆக்கவியல் நிகழ்வுகளும்.

மாபெரும் ஆய்வரங்கும் புத்தகக் கண்காட்சியும் நூல்கள் வெளியீடும் கலை ஆக்கவியல் நிகழ்வுகளும்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மூதூர் ஜே.எம்.ஐ நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் முகமாகவும், தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வகையிலும் இவ்வார இறுதி நாட்களில் (24,25) மூதூர் மண்ணில் பிரமாண்ட ஆய்வரங்கும், புத்தகக் கண்காட்சியும், நூல்கள் வெளியீடும், கலை ஆக்கவியல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இரு தினங்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் இலங்கையின் முன்னணிப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்குபற்றவுள்ளனர்.

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6 ஆய்வரங்குகளில் 15 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்படவுள்ளன. அத்துடன் நாடளாவிய ரீதியாகவுள்ள எழுத்தாளர்களின் 60 இலக்கிய நூல்களும் இலவசமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.

இலக்கியம், சமூக சேவை, ஊடகவியல், தொழில்முனைவோர், சிரேஷ்ட பிரஜைகள் உள்ளடங்கலாக சுமார் 200 இற்கு மேற்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகள், போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டுவோருக்கு சுமார் இரண்டு இலட்ச ரூபாவுக்கான பரிசுகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.

மேலும், கருத்தரங்கம், வெளியீடு, விருதுகள், போட்டி, புத்தகக் கண்காட்சி, கலை, புகைப்பட மற்றும் கையெழுத்துக் கலைக் கண்காட்சிகளும், உள்ளுர் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தல் என்பனவும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வுகளில் பிரபல ஆக்க இலக்க எழுத்தாளரும் வைத்திய அதிகாரியுமான ஏறாவூர் ஜலீலா முஸம்மிலின் “சுவனத்து வைரம்” எனும் சிறுகதைகளின் தொகுப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ள
து.

No comments: