News Just In

10/27/2026 06:03:00 PM

போதைப்பொருள் தடுப்புக்கான சமூக விழிப்புணர்வுக் கண்காட்சி

போதைப்பொருள் தடுப்புக்கான சமூக விழிப்புணர்வுக் கண்காட்சி


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் உட்பட ஒட்டு மொத்த சமூகத்தினரையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், “வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுங்கள்” எனும் தொனிப்பொருளிலான போதைப்பொருள் தடுப்பு, சமூக விழிப்புணர்வுக் கண்காட்சி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழுநாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் இந்த விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இதன்போது, போதைப்பொருள் பாவனையின் ஆபத்துக்கள், அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தெரிவுசெய்வதன் முக்கியத்துவம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் திங்களன்று புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

“வாழ்க்கையைத் தெரிவுசெய்வோம் – எதிர்காலத்தைப் தெரிவுசெய்வோம்” என்ற செய்தியை முன்னிறுத்தி, போதைப்பொருள் அற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்குமான விழிப்புனர்வு கண்காட்சி நொவெம்பெர் மாதம் 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுற்றது.

போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் உடல், உள மற்றும் சமூகப் பாதிப்புகள் தொடர்பில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் உட்பட ஒட்டு மொத்த சமூகத்தினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறீகாந்த், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரி, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், துறைசாரநத உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்

No comments: