News Just In

10/27/2026 06:06:00 PM

கிழக்குப் பல்கலைக் கழக சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் மருத்துவக் கண்காட்சி

கிழக்குப் பல்கலைக் கழக சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் மருத்துவக் கண்காட்சி





(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை (28-31) மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் நடைபெறுகிறது.

“அறிவியல், புத்தாக்கம், சமூகப் பங்கேற்பின் ஊடாக சுகாதார முன்னேற்றத்தை இணைத்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் மருத்துவம், சுகாதார அறிவியல், நோய்த் தடுப்பு, நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள், பல்வேறு சுகாதாரத் துறைகள் தொடர்பான விளக்கங்கள், காட்சிப்படுத்தல்கள் என்பன இடம்பெறவுள்ளன.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகச் சமூகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு மருத்துவம், சுகாதார அறிவியல் துறைகளின் புதிய முன்னேற்றங்களை அறிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளுத.

இக்கண்காட்சியில் பங்கேற்று பயனடையுமாறு பொதுமக்களை ஏற்பாட்டாளர்களான கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்

No comments: