News Just In

10/27/2026 03:03:00 PM

ஷிரந்தி கைதின் பின்னர் நடக்கும் அரசியல் நாடகங்கள் - தப்பியோடிய பிக்குகள்

ஷிரந்தி கைதின் பின்னர் நடக்கும் அரசியல் நாடகங்கள் - தப்பியோடிய பிக்குகள்







நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து, ராஜபக்ச தரப்பினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

இலங்கையின் நவீன துட்டகைமுனு என வர்ணிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, உறவுகள் அற்ற நிலையில் தனிமையில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்ச தரப்பினர், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த பல்வேறு வியூகங்களை அமைத்து வருகின்றனர்.

எனினும் இதனை சமகால அநுர அரசாங்கம் மிகவும் புத்திசாதுர்யமாக கையாண்டு, அவர்களை தோல்வி அடைய செய்து வருகின்றனர்.

இதனொரு அங்கமாக குற்றவாளி ஞானசார தேரரரை பின்புலமாக வைத்து அரங்கேற்றப்பட்ட நாடகம் படுதோல்வி அடைந்துள்ளது.

விகாரமஹாதேவி பூங்காவில் முகாமிட்டிருந்த பிக்கு குழுவினர், விழுந்தவன் மீசையில் மண் ஒட்டாத கதையாக, போராட்டக்களத்திலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் என சூளுரைத்த பிக்கு கும்பல், நீதிமன்றம் ஊடாக கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக தப்பியோடியிருந்தனர்.

இந்த போராட்டகளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பாதிப்புகள் ஏற்பட வேண்டும் என சூனியம் வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியிருந்தன

அதேவேளை பௌத்தர்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் செயற்பாட்டின் மற்றுமொரு அங்கமாக அனுராதபுரம் புண்ணிய பூமி தொடர்பில் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட பொய்யான பிரசாரங்களை மேற்கொளள்ளப்பட்டன.



அத்துடன் பௌத்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காவந்தீச யானையின் இறப்பை அடிப்படையாக கொண்டும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மறுபக்கத்தில் பச்சை குத்தும் மற்றும் தலைமுடிக்கு வர்ணம் பூசும் இளைஞர், யுவதிகளை கைது செய்யது சிறையில் அடைக்கும் புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாகவும் ராஜபக்ச தரப்பினால் திட்டமிட்டு தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன.எனினும் அதனை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக ராஜபக்ச குடும்பத்தில் அனைவரும் ஏதோவொரு குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு உட்பட்டு வருகின்றனர்.

தற்போது நிலவரப்படி நாமல் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஷிரந்தி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்துவரும் நாட்களில் ராஜபக்சர்கள் முக்கிய நபர்கள் ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இவ்வாறான குழப்பகரமான அரசியல் நாடகங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: