ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, 'ஜனவரம புரவசியோ' (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் தங்காலையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று இன்று(22.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பௌத்த தேரர்களின் தலைமையில் நடைபெற்ற நான்காவது பாரிய அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள்
நாட்டில் நல்லாட்சியை நிலைநிறுத்தும் வகையிலும், அரசின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை எவ்வித தயக்கமுமின்றித் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைச் சீர்குலைக்கக முற்படும் தரப்புகளுக்கு எதிராகத் தங்களது பலத்தைக் காட்டும் வகையில் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: