News Just In

10/22/2026 07:48:00 PM

துவிச்சக்கரத்தில் நாட்டில் கரையோர சவாரி செய்யும் சிரேஷ்ட பிரஜைகளை பயணத்தின் நடுவே வரவேற்று கௌரவிப்பு.

துவிச்சக்கரத்தில் நாட்டில் கரையோர சவாரி செய்யும் சிரேஷ்ட பிரஜைகளை பயணத்தின் நடுவே வரவேற்று கௌரவிப்பு.



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

நாட்டில் கரையோரங்களைக் கடந்து சவாரி செய்யும் சிரேஷ்ட பிரஜைகளை பயணத்தின் நடுவே வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு – வாழைச்சேனை மத்திய பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.

'முதியோர்களின் பசுமைச் சகவாழ்வு” எனும் தொனிப்பொருளில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், 31 நாட்களை இலக்காகக் கொண்டு சிரேஷ்ட பிரஜைகள் சிலர் துவிச்சக்கரப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களது கரையோரப் பயணத்தின் நடுவே அவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தின் பதில் உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம். பாறூக் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முதியோர்களின் உரிமைகள், நலன்கள் உட்பட அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சேவைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1890 என்ற தொலைபேசி இலக்கம் தொடர்பான தகவல்களும் சிரேஷ்ட பிரஜைகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

முதியோரின் ஆரோக்கியம், மனவுறுதி, சமூகப் பங்களிப்பு என்பனவற்றை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கரையோர துவிச்சக்கரப் பயணத்தை முதியவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

துவிச்சக்கரப் பயணத்தை மேற்கொண்டுள்ள முதியோர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வில், வாழைச்சேனை மத்திய பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம். தாஹிர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச். சுல்ஃபியா, தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். நிஸாம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரிவின் முதியோர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

No comments: