News Just In

9/05/2026 11:52:00 AM

வடக்கு - கிழக்கு தாயகப் பெண்களுக்கான "பொட்டு" தேவையில் உதவி (Help in need )சிறப்பு உதவித் திட்டம் ஆரம்பம்!

வடக்கு - கிழக்கு தாயகப் பெண்களுக்கான "பொட்டு" தேவையில் உதவி (Help in need )சிறப்பு உதவித் திட்டம் ஆரம்பம்!


வடக்கு - கிழக்கு இணைந்த எமது தாயகப் பிரதேசத்தில், கடந்த கால யுத்தத்தின் கொடூரங்களால் தாய், தந்தை இருவரையும் இழந்து ஆதரவற்ற நிலையில் வாழும் எமது சகோதரிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிசெய்யும் உயரிய நோக்குடன், 'குளோபல் தமிழ் வெல்ஃபேர் விஷன்' (Global Tamil Welfare Vision - GTWV) பெண்கள் அமைப்பினால் இந்தச் சிறப்பு உதவித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

போரின் வடுக்களைச் சுமந்து நிற்கும் எமது இளம் பெண்களின் புதிய வாழ்க்கைப் பயணத்திற்குத் தேவையான சகல ஆதரவுகளையும் வழங்கி, அவர்களைச் சமூகத்தில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் தலைநிமிர்ந்து வாழ வைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் உதவிகள்:

* திருமண உதவிகள்: புதிய குடும்ப வாழ்வை ஆரம்பிப்பதற்கான மங்கல உதவிகள் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு.

* கல்வி மேம்பாடு: உயர்கல்வி மற்றும் தொழில்சார் திறன் வளர்ப்புக்கான வழிகாட்டல்களும் நிதியுதவியும்.

* பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாடு: சுயதொழில் முயற்சிகளுக்கான ஊக்கப்படுத்தல்கள் மற்றும் பொருளாதாரத் தற்சார்பை உருவாக்குவதற்கான உதவிகள்.


"தாயகப் பெண்களின் கண்ணியமான வாழ்விற்கும், புதிய தொடக்கத்திற்கும் அரணாகத் துணை நிற்போம்!"

இச்சமூகப் பணியில் நாமும் ஒன்றிணைந்து, எமது சகோதரிகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்!

நிர்வாகம்,

Global Tamil Welfare Vision (GTWV) - பெண்கள் அமைப்பு.

No comments: