News Just In

9/26/2026 03:19:00 PM

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



புத்தசாசன அமைச்சின் ஊடாக புத்தகங்கள் அச்சிடும் போது குறிப்பிட்ட கொள்முதல் செயன்முறைகளுக்கு அப்பாற் சென்று செயற்ப்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைதாகியுள்ளார்.

இதற்கமைய சந்தேக நபரினால் தனக்கு நெருங்கிய நிறுவனமொன்றிற்கு 3 சந்தர்ப்பங்களில் 4,790,000 ரூபா பணத்திற்கு குறித்த புத்தகங்களை அச்சிடுவதற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் புத்தகங்களை களஞ்சியத்திற்கு பெற்றுக்கொள்ளாது, குறித்த பணத்தை செலுத்தியுள்ளதன் ஊடாக அரசிற்கு நட்டம் ஏற்ப்பட்டுள்ளதுடன் இதுவொரு ஊழல் செயற்பாடு என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைதான புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments: