வளப்பங்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வளங்கள் போதுமான அளவில் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே.எஸ். அருள்ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.
கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர உள்ளிட்ட பலரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி ஸ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு, எச்.எல்.எம். றிபான் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித–யானை மோதல் மற்றும் அதனைத் தடுப்பதற்கான வளப்பங்கீடு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் நாட்டில் மனித–யானை மோதல் அதிகமாகக் காணப்படும் மாவட்டங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், யானை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக முன்மொழியப்பட்ட வளங்கள் குறைக்கப்படுவது தொடர்பில் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, வவுனதீவு, பட்டிப்பளை, செங்கலடி, கிரான், வாகரை மற்றும் ஓட்டமாவடி ஆகிய 7 இடங்களில் யானை கட்டுப்பாட்டு பிரிவுகள் (Elephant Control Units) அமைப்பதற்கு முன்மொழியப்பட்டிருந்தன.
எனினும், தற்போது 5 யானை கட்டுப்பாட்டு பிரிவுகள் மட்டுமே வழங்கப்படவுள்ளதாகவும், வெல்லாவெளி மற்றும் கிரான் ஆகிய இரண்டு பகுதிகள் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, கிழக்கு பிராந்தியத்திற்கு வழங்கப்படவுள்ள 38 மோட்டார் சைக்கிள்களில் 5 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படுவதுடன், 33 மோட்டார் சைக்கிள்கள் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படுவதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே 14 யானை கட்டுப்பாட்டு அலுவலகங்கள் காணப்படும் நிலையில், மேலும் 9 அலுவலகங்கள் வழங்கப்படுவதன் மூலம் அங்கு மொத்தமாக 23 அலுவலகங்கள் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மாறாக, மனித–யானை மோதல் அதிகமாகக் காணப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்மொழியப்பட்ட 7 யானை கட்டுப்பாட்டு பிரிவுகளில் 2 பிரிவுகள் நீக்கப்பட்டு, 5 பிரிவுகள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
எனவே, வளங்கள் தேவையின் அடிப்படையில் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக மனித–யானை மோதல் அதிகமாகக் காணப்படும் வெல்லாவெளி, கிரான் உள்ளிட்ட பகுதிகளின் நிலைமையையும் கருத்திற்கொண்டு, முன்மொழியப்பட்ட அனைத்து 7 யானை கட்டுப்பாட்டு பிரிவுகளையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனித–யானை மோதல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மனித உயிரிழப்புகளும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டு வருவதால், அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, யானை வேலிகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது, அரச அதிகாரிகளின் நிர்வாகத் தவறுகள் காரணமாக அரசியல்வாதிகள் பொதுமக்கள் முன்னிலையில் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரச நிறுவனங்களின் வளப்பங்கீட்டில் மாவட்டங்களின் தேவைகள் மற்றும் பாதிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு–மாதவனை பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பொதுமக்கள் மாதாந்த உதவிக் கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட சமூக நலக் கொடுப்பனவுகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக வயோதிபர்கள் உள்ளிட்ட பயனாளிகள் கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுவதைக் கருத்திற்கொண்டு, பயனாளிகளின் கிராமங்களுக்குச் சென்று கொடுப்பனவுகளை வழங்கக்கூடிய மாற்று பொறிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, வெல்லாவெளி–வக்கியெல்ல வீதி, வில்லுக்குளம் வீதி மற்றும் மாவட்டத்தின் முக்கிய பாலங்களான மண்டூர்–குறுமன்வெளி, பட்டிருப்பு, திகிலிவெட்டை, கிரான், மகிழவெட்டுவான் மற்றும் குருக்கள்மட பாலங்களின் புனரமைப்பு தொடர்பான தற்போதைய முன்னேற்ற அறிக்கைகளை வழங்கி, குறித்த பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் கோரப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் காத்தான்குடி நகர சபையினால் வரி அறவீடு செய்யப்பட்டமை தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான வீதிகளில் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் அகழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் உரிய நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது.

No comments: