News Just In

9/29/2026 11:07:00 AM

விமான நிலையத்திலிருந்து வந்த கார் விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு


விமான நிலையத்திலிருந்து வந்த கார் விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு



திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இறக்கக்கண்டி நோக்கி பயணித்த கார், அதிகாலை 3.30 மணியளவில் நொச்சிக்குளம் பகுதியில் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் இறக்கக்கண்டி, வாளையூற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதான என். நிஜாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி ஆர். ரொஜானா (25), மகன் உமர் ஹபீப் (5) மற்றும் சகோதரர் ஆர். சஹி (19) ஆகியோர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments: