அடுத்த 3 மாத காலப்பகுதிக்கு எரிபொருள் மானியமொன்றை வழங்குவது தொடர்பான யோசனை இன்று (28) அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று (27) நடைபெற்ற 'ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி' மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்குரிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
No comments: