மாளிகைக்காடு செய்தியாளர்
நாட்டில் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கும் ஈ பெஸ்ட் கெம்பஸின் கல்முனை கிளையில் கணனி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான 22ஆவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (26) காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்றது.
ஈ பெஸ்ட் கெம்பஸின் தவிசாளர் பி.எம்.எம். ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது உரையாற்றிய தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், இன்றைய நவீன உலகில் கல்வியுடன் தகவல் தொழில்நுட்ப அறிவையும் பெற்றிருப்பது இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்தார். குறிப்பாக கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் காணப்படும் புதிய வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தமது திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி, தகவல் தொழில்நுட்பத்தின் அவசியம் மற்றும் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான தேவைகள் தொடர்பிலும் அவர் கருத்துக்களை முன்வைத்தார்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ், மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற உப பீடாதிபதி ஈ. மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விசேட அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், அல்-மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான நூருல் ஹுதா உமர் கலந்து கொண்டார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பயிற்றுநர், ஈ பெஸ்ட் கெம்பஸின் நிர்வாகிகள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது கணனி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இளைஞர்களின் கல்வித் தகைமைகளை மேம்படுத்துவதுடன், தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆங்கில மொழித் திறன்களை வளர்த்து அவர்களை எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் உயர்கல்விக்கும் தயார்படுத்தும் நோக்கில் ஈ பெஸ்ட் கெம்பஸ் தொடர்ச்சியாக இத்தகைய பயிற்சிப் பாடநெறிகளை முன்னெடுத்து வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

No comments: