செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.
இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.
No comments: