.
ஏறாவூர் 05ஆம் குறிச்சியில் ஊரருகு, வெல்லங்குடா கண்டம் உள்ளிட்ட வயல்
நிலங்களிலும், ஆற்றை அண்டிய பகுதிகளிலும் ஏறாவூர் நகரசபையினால்
சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதால் மக்கள், விவசாயிகள்
மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு, குறித்த
பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும், கொட்டுவதற்கும்
பொருத்தமான மாற்று இடமொன்றைத் தெரிவுசெய்து, அதற்கான நடவடிக்கைகளை
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று
(03.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர்
திருமதி தனபாலசுந்தரம் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதேச
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ கந்தசாமி பிரபு தலைமையில்
நடைபெற்றது.
இதன்போது, ஏறாவூர் 05ஆம் குறிச்சியில் ஊரருகு – வெல்லங்குடா கண்டம்
மற்றும் ஆற்றை அண்டிய பகுதிகளில் ஏறாவூர் நகரசபையினால் சேகரிக்கப்படும்திண்மக்கழிவுகள் தொடர்ச்சியாகக் கொட்டப்படுவதாக மக்கள் முன்வைத்துள்ளமுறைப்பாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்பிரச்சினையை முன்வைத்தார்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில்வசிக்கும் மக்கள் பல்வேறு சுகாதாரப் பாதிப்புகளை எதிர்நோக்கிவருவதாகவும், குறிப்பாக இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் முறையாகஅகற்றப்படாமல் கொட்டப்படுவதன் காரணமாக காகங்கள் மற்றும் ஏனைய பிராணிகள்அவற்றை அருகிலுள்ள ஆலயங்களுக்குள் கொண்டு செல்வதாகவும் மக்கள்சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களின்
அன்றாட வாழ்க்கையிலும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வயல் நிலங்களுக்கு அருகில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதால்
விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும், விவசாய நிலங்களின்
சுற்றுச்சூழல் நிலைமை பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, ஆற்றை அண்டிய பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதன் காரணமாகஆற்றுநீர் மாசடைவதுடன், ஆற்றை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமும்பாதிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரையில் உரிய நடவடிக்கைஎடுக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கம்சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும்
நீர்நிலைகளுக்கு அருகில் திண்மக்கழிவுகளை கொட்டும் நடைமுறையை உடனடியாகநிறுத்த வேண்டும் என வலியுறுத்திய சாணக்கியன் இராசமாணிக்கம்,திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் கொட்டுவதற்கும் பொருத்தமானமாற்று இடமொன்றைத் தெரிவுசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் முன்வைத்தார்.
இதுதொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதையடுத்து, சம்பந்தப்பட்டஅனைத்து திணைக்களங்களும் இணைந்து குறித்த பகுதிக்கு களப்பரிசோதனைமேற்கொண்டு, அப்பகுதியின் நிலைமை தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
காணி ஒதுக்கீடுகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தல்
இதேவேளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி
கிழக்கில் ஓபல் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான காணி, மாவடிவேம்பில்மயானம், சிறுவர் பூங்கா, கலாசார மண்டபம் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கான காணி ஆகியவற்றை ஒதுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக,காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் காணிகள் அடையாளம்காணப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட காணிகளை உரிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்காககாணிப் பயன்பாட்டுக் குழுவில் சமர்ப்பித்து, அதனைத் தொடர்ந்து பிரதேசசபைக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும்சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
குறித்த காணிகள் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் தாமதமின்றி
முன்னெடுக்கப்படுவதன் மூலம், அவற்றை பொதுமக்களின் தேவைகளுக்காக விரைவில்பயன்படுத்தக்கூடிய நிலை உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சித்தாண்டி விளையாட்டு மைதானத்தை முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை
அத்துடன், சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு
மைதானத்தைஎவ்விதத்தடைகளுமின்றிமுழுமையாகப்பயன்படுத்துவதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்தார்.
இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்குகுறித்த மைதானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அதன்பயன்பாட்டில் காணப்படும் தடைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்குசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்வலியுறுத்தினார்.
முந்தனையாற்றுப் படுகையில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் கவனம்
முந்தனையாற்றுப் படுகையின் சந்தனமடு தொடக்கம் மாவடியோடை வரையிலானபகுதிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெறுவதாகவும், இதன் காரணமாகஅப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் நாடாளுமன்றஉறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
ஆற்றுப்படுகையில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு காரணமாக விவசாயநிலங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை
கருத்திற்கொண்டு, இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்
எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் இணைந்து
களப்பரிசோதனை மேற்கொண்டு, அப்பகுதியில் இடம்பெறும் மண் அகழ்வின் நிலைமைதொடர்பில் ஒரு வார காலத்திற்குள் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுடன் சாணக்கியன் கலந்துரையாடல்
இதனிடையே, மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நீண்டகாலப்பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பிரதேச செயலகத்திற்கு முன்னால்ஆர்ப்பாட்டமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பண்ணையாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாம்ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை மீண்டும்
முன்னெடுத்துச் செல்வதற்கு பண்ணையாளர்கள் தமக்கு அனுமதி வழங்க வேண்டும்என சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பண்ணையாளர்கள் தமது சம்மதத்தைத் தெரிவித்ததுடன், தங்களது
பிரச்சினைகளுக்கு சட்டரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளைமுன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மக்கள் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகள் அவசியம்
மேலும், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து,
பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உள்ளிட்டபல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேசஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்பதிவு செய்வதுடன் நின்றுவிடாமல், அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமானதீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய பிரச்சினைகளுக்குஅதிகாரிகள் உரிய கவனம் செலுத்துவதுடன், கூட்டங்களில் எடுக்கப்படும்தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதும் அவசியம்எனவும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர், ஏறாவூர் நகரசபைத்
தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அதிகாரிகள்உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments: