மட்டக்களப்பு மாவட்டம் - கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் சமூக மேம்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது, அத்துடன், பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
சமுர்த்தி மகாசங்க மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வறுமைக்குட்பட்ட 25 குடும்பங்கள் தலா 150,000 ரூபாய் அரசாங்க மானியத்தின் கீழ் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வுகளில், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்கான கிளீன் சிறிலங்கா வேலைத்திட்ட இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். சமீம், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம். சரீப், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரவிச்சந்திரன் உட்பட இன்னும் பல மதிகாரிகளும் பிரஜா சக்தி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments: