( ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி செயற்பாடுகள் சம்பநற்தமாகவும் அதனோடு இணைந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் உளவள விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயும் கூட்டம் மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட உதவிச் செயலாளர் ஜீ. பிரணவன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கசுகாதார துறைசார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட உளவள துணை இணைப்பாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்த இந்நிகழ்வில் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் செயற்பாடுகள் அத்துடன் மாவட்ட உள சமூக ஒன்றியம் ஆகியவற்றின் செயற்பாடகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
சமூக ஒன்றியம் கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் ஆகியோரது ஒருங்கிணைப்பில் குறித்த கூட்டமானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (18) திகதி இடம்பெற்றது.
சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்களில் கடந்த கால செயற்பாடுகளின் முன்னேற்றங்கள், 18 வயதிற்கு குறைந்த சிறார்களை வேலைக்கு அமர்ந்துவது, சிறுவர் இல்லங்களின் தேவைப்பாடுகள் அவற்றை நிருவகிப்பதில் காணப்படும் இடர்பாடுகள், கட்டாய கல்வி குழு, கோட்ட மட்ட கல்விக்குழு ஆகியவற்றின் எதிர்கால மற்றும் நிகழ்கால செயற்றிட்டங்களின் முன்னேற்றம், அரசினால் முன்னெடுக்கப்படும் திவியட்ட சவிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
அத்தோடு முன் பள்ளி பிள்ளைகளுக்கான நலன் திட்டங்கள், கரப்;பிணித்தாய்மார்களுக்கான நலன் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.
No comments: