மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு கனடா வன்னிச்சங்கத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு
கனடா வன்னிச்சங்க அமைப்பின் ஏற்பாட்டில், இலங்கை வன்னி சங்க உறுப்பினர்களின் அனுசரணையுடன் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உதவும் வகையில் 12 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கனடா வன்னிச்சங்கத்தின் *ரூபா. 562,800/= நிதிப் பங்களிப்புடன்* இத்துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
செட்டிக்குளம் – 2 மாணவர்கள்
குஞ்சிக்குளம்மன்னார் – 1 மாணவர்
ஓமந்தை – 1 மாணவர்
மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் – 5 மாணவர்கள்
புதுக்குடியிருப்பு– 3 மாணவர்கள்
மாணவர்களின் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, களப்பணியின் ஊடாக அவர்களின் விபரங்களைச் சேகரித்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
8/25/2026 11:26:00 AM
Home
/
Unlabelled
/
மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு கனடா வன்னிச்சங்கத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு !
மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு கனடா வன்னிச்சங்கத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: