News Just In

8/28/2026 05:34:00 AM

டிரம்ப் விதிக்கும் வரிகள்: கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

டிரம்ப் விதிக்கும் வரிகள்: கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்




Trump tariffs threaten 1 lakh Canadian jobs: டிரம்ப்பின் முடிவால் கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கவுள்ளனர்.
அமெரிக்கா - கனடா வர்த்தக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனடா ஏற்றுமதி செய்யும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.

இதனால், கனடாவில் 90,000 முதல் 1,00,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த புதிய வரிகள், ஏற்கனவே கனடா எஃகு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகளும், கார் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளும் மேலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கனடா நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வர்த்தக நிபுணர்கள் கூறுவதாவது: “50 சதவீத வரி என்பது சாதாரண உயர்வு அல்ல. இது பல நிறுவனங்களுக்கு அமெரிக்க சந்தையில் விற்பனை செய்வதை முற்றிலும் சாத்தியமற்றதாக மாற்றுகிறது. லாப விகிதம் குறைவதால், நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால், அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் போட்டியாளர்களிடம் சந்தையை இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளனர்.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி, 28 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை அறிவித்து, அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த “பழிவாங்கும் வரிகள் அமெரிக்காவை பாதிக்கலாம், ஆனால் கனடா பொருளாதாரத்தையே அதிகமாக பாதிக்கும்” என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மரப்பொருட்கள், இயந்திரங்கள், மின்சாதனங்கள், மரச்சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை அதிகமாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, கனடாவின் வனவளத் துறை கடுமையான அழுத்தத்தில் உள்ளது.

கனடாவின் பொருளாதாரம், அமெரிக்காவுடன் 70 சதவீதம் ஏற்றுமதியுடன் தொடர்புடையது. இதனால், இந்த வர்த்தக போர், கனடாவின் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் தீவிரமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

No comments: