காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெகவுக்கு யாரேனும் சென்றால் அதை யாரும் அணை போட்டு தடுக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
காமராஜர் பிறந்த நாளையொட்டி, திருச்சியில் காங்கிரஸ் சார்பில் அருணாசலம் மன்றத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணி இருந்துள்ளது. நாட்டில் தற்போது பல மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத இடங்களில், பாஜக மற்ற கட்சிகளை உடைத்து ஆட்சியில் அமர்கிறது.
எனவே, தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணி அமைந்திருப்பது புதிது கிடையாது. ஆனால், கூட்டணி மாறியவுடன் அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று திட்டிக் கொள்வது தேவையற்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என்றுதான் மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். எனவே, முந்தைய திமுக ஆட்சி குறித்து நான் தனியாக எந்தச் சான்றிதழும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.தவெக ஆட்சியில் லஞ்சம், ஊழல் குறைந்துள்ளது. பத்திரப் பதிவு, கட்டுமான அனுமதிபெறுவது ஆகிய நடைமுறைகளில் லஞ்சம் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து தவெகவுக்கு யாரேனும் சென்றால் அதை யாரும் அணை போட்டு தடுக்க முடியாது. இவ்வாறு கூறினார்.

No comments: