
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேசிக்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது தங்கை பிரியங்கா காந்தி. அருகில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் 6 முறை ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், மறைந்த 7 முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
‘‘அனைவரும் இருக்கையில் அமரவேண்டும்’’ என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். ஆனால், அவரது அறிவுரையை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை மீண்டும் கூடியபோது அதே கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, மறைந்த மாநிலங்களவை உறுப்பினர் களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments: