News Just In

7/02/2026 06:33:00 AM

அரிமா கழகத்தால் செங்கலடி மத்திய கல்லூரி மாணவன் மகேந்திரன் யோகேந்திரனுக்கு ஒன்பது இலட்சத்தி அறுபது ஆயிரம் பணத்தொகை!

 அரிமா கழகத்தால் செங்கலடி மத்திய கல்லூரி மாணவன்  மகேந்திரன் யோகேந்திரனுக்கு ஒன்பது இலட்சத்தி அறுபது ஆயிரம் பணத்தொகை!


செங்கலடி மத்திய கல்லூரி மாணவன்  மகேந்திரன் யோகேந்திரன் என்பவர் தகவல் தொழில் நுட்ப பொறியியல் துறையில் மாவட்டத்தில் 4வது இடத்தில் சித்தியடைந்துள்ளார். இவர் வேப்ப வெட்டுவான் பாலர்சேனை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவனுக்கான 48 மாதங்களுக்கான நிதியுதவி தொகை ஒன்பது இலட்சத்தி அறுபது ஆயிரம் பணத்தொகையும் பரிசுப்பொருட்களும் செங்கலடி அரிமா கழகத்தால் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் மாணவனுக்கு தேவையான அனைத்து பொருட்களும் பரிசு பொருட்களாக வழங்கி கௌரவிக்கப்பட்டது க.மோகனின் தலைமையில் நடந்த நிகழ்வில் செயலாளர் சர்மினி பொருளாளர் கோபிநாத் என பல கழக உறுப்பினர்களும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

No comments: