News Just In

7/31/2026 04:23:00 PM

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது



மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று 31/07/2026 அன்று மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் கெந்துநெத்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய அபிவிருத்தி மற்றும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு விடயங்களை முன்வைத்தார்.
குறிப்பாக, நரிப்புல்தோட்டம் – பங்குடாவெளிப் பாலம், மகிழவட்டவான் பாலம் மற்றும் அம்பிளாந்துறை குருமன்வெளிப் பாலம் புனரமைப்பு தொடர்பாக கருத்துகளை முன்வைத்து, இவற்றை விரைவாக புனரமைத்து மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அத்துடன், அம்பிளாந்துறை – குருக்கல்மடம் பாதை மற்றும் குருமன்வெளி – மண்டூர் பாதை ஆகியவற்றை மக்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் யானை வேலிகளை புனரமைத்தல், தேவையான பகுதிகளில் புதிய யானை வேலிகளை அமைத்தல் மற்றும் மட்டக்களப்பில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைத்தல் தொடர்பான விடயங்களும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய தேவைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஹீஸ்புல்லா, இரா. சணாக்கியன், இ. சிறிநாத், க. பிரபு உள்ளிட்டோர் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள் பங்கேற்று, தங்களது பிரதேசங்களின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தனர்

No comments: