News Just In

7/30/2026 07:02:00 AM

மட்டக்களப்பு மைலம்பாவெளி ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு

மட்டக்களப்பு மைலம்பாவெளி ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு



ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (29) பிற்பகல் நடந்த இத்தாக்குதலில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டு நடத்திய குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளதுடன் ஏனையவர்கள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பகல் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, அன்னதானம் வாங்கி உண்ட இளைஞர் ஒருவர், உணவு சரி இல்லை என தெரிவித்துள்ள நிலையில் அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த இளைஞருடன் 7 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கியவர்கள் மீது தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது ஒருவர் மாத்திரம் சிக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: